ஈழத்திசை பரப்பு
கவிதை
ஈழ நாட்டின் அழகையும் ஒருமைப்பாட்டையும் பாடும் இகவிதை ஈழத்திசை பரப்பும் அழகிய ஓசையாகும்.
ஈழவளநாடு இனிமைசேர்நாடு இங்கெங்கும் அழகென்று பண்பாடு! நீள்நதிகள் பாய்வன இங்குபாரு நெஞ்சமதை பாசத்தால் நீநீட்டு! வடக்கினை தெற்கினை ஒன்றாய்ப்பாரு வடுக்களை மறந்து நீமாறு! இடுக்கண் மறந்திட இங்குண்டு பூங்காடு இதமெனவே நீஅதனைப் போய்ச்சேரு! நீள்தெங்குகளும் பனைகளு முண்டிங்குபாரு! நலமுண்டு அதிலெல்லாம் உனையும்நீ மாற்று! புள்ளெனவே நீபறந் தெங்கும் செல்லு புசிப்பதொடு இலங்கையென் நாடென் றோது! மிக்குயர் மலைகளும் தேயிலையு முண்டு மிதமான கல்விச் சாலைகளு முண்டு! திக்கெல்லாம் உனைப்பாட கல்விப் பாலுண்டு திசைபரப்பு ஈழமென் நாடென்று! தமிழ் முஸ்லிம் சிங்களவர் நாமொன்றென்று தரணியிலே நீ உரத்துப் பாடு! தேமாங்கனியன்ன ஒற்றுமை ஒன்றேயேநீ தெவிட்டாத சுவையென இங்கு பேணு! செம்புலமெங்கும் செம்மையையே நீகாணு சரித்திரம் புதுபடை நீஉயரு! நம்மவர் புகழெங்கும் களிபேசு நமதான நாட்டினையே உயர்த்திப்பேசு! கோயில்பள்ளி தாகபைகள் நிறைநாடு குனிந்து நிமிரச்செயும் விவசாயநாடு! நோயில்லை எங்களுக்குள் ஒன்றாயின்பாரு நீட்டிடலாம் சிந்தித்திட நிமிர்ந்துநீபாரு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக