📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 7 ஜூலை, 2025

2026 ஆம் ஆண்டில் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை?

 கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக கல்வியமைச்சர் வௌியிட்டுள்ள கருத்துக்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. ஐந்து தூண்களில் மாற்றம்

  • கலைத்திட்ட மறுசீரமைப்பு
  • ஆசிரியர் வலுவூட்டல்
  • புதிய மதிப்பீட்டு முறை
  • அடிப்படை வசதிகள விருத்தி
  • பொதுமக்கள் தௌிவூட்டல்
  • 2026 இல் அமுலாகும் 

2.  2026 இல் அமுலாகும் தரம் 1, தரம் 6 ஆகியவற்றுக்கு 2026 ஆம் ஆண்டு அமுலாகும். தரம் 2, தரம் 7 ஆகியவற்றுக்கு 2027 ஆம் ஆண்டு அமுலாகும்.

3. பரீட்சை முறையில் மாற்றம்
    2029 இல் க.பொ.த (சா.த) பரீட்சை புதிய திட்டப்படி நடைபெறும். எழுத்துப் பாடங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும்.

4. தரம் 9 இல் திறன் பரீட்சை
    தரம் 9 இல் திறன் மதிப்பீட்டுக்கான புதிய பரீட்சை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி மற்றும்  கற்றல் துறைகளைத் தீர்மானிக்க இது பயன்படும். 

5. கற்றல் முறையில் மாற்றம்
    மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கும் திறன், மனப்பாங்கு விருத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். மனப்பாடமாக்கும் முறை நீக்கப்படும்.

6. பாடவேளை நேர அதிகரிப்பு
    ஒரு பாடவேளை 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படும். ஒரு நாளைக்கு 7 பாட வேளைகள் என்ற அடிப்படையில் கற்றல் திட்டமிடப்படும்.

7. கற்றல் சாதனங்களில் மாற்றம்
    பாடநூல்களுக்குப் பதிலாக மொடியுல்கள் அறிமுகமாகும். மொடியுல் தவணைக்கானது. கட்டாய மற்றும் தெரிவு மொடியுல்கள அறிமுகமாகும். அவை சுய கற்றல் செயற்பாடுகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கும். 


8. பாடங்களில் மாற்றம்
    கட்டாய பாடங்களும் தெரிவுப் பாடங்களும் காணப்படும். தொகுதிகளிலிருந்து தெரிவு செய்ய வேண்டும். 

9. ஆசிரியர் பயிற்சிக்கு முன்னுரிமை - சீர்திருத்தம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிகள் தேசிய மற்றும் மாவட்ட அடிப்படையில் நடைபெறும். பயிற்சிகள் விரைவில் ஆரம்பமாகும்.

10. வௌ்ளை அறிக்கை
    கல்விச் சீர்திருத்தம் தொடர்பான விடயங்களை சட்டபூர்வமாக்கும் வகையில் வௌ்ளை அறிக்கை ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

#தமிழ்ச்சுடர் | #கலைமகன் பைரூஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக