📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 3 மார்ச், 2025

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

 எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கி பின்னோக்கி வாரிவிடப்பட்ட கன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின்மேலே கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக்கட்டப்பட்ட  வேட்டி - நீண்டு தொங்கும் முழுக் கைச்சட்டை - மார்பிலே குறுக்கே போர்த்தப்பட்ட பொடிநிற ப் போர்வை - காலிலே தொடுதோல் - கையிலே புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு.

(தொடரும்)

படங்கள் இணைக்கப்பட்டுள்ள... 

ஞாயிறு, 2 மார்ச், 2025

தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன

அ - எட்டு 

ஆ -  பசு 

இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஈ -  கொடு, பறக்கும் பூச்சி 

உ -  சிவன் 

ஊ - தசை, இறைச்சி 

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - கவிதைகள் இரண்டு

    வானவில்

மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே

வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!

விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்

வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்

உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சிந்திக்கத்தக்க அருமந்த பழமொழிகள்

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.

9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

புதன், 26 பிப்ரவரி, 2025

உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - நுழைவாயில்

'நுழைவாயில்' என்ற மகுடந்தாங்கி இருந்தாலும், அருமந்த நுழைவாயில் என்பதால் முதன் முதலில் அதனை இங்கே இற்றைப்படுத்துகிறேன். 

    'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு'

    'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
    வாளொடு முன்தோன்றி மூத்த குடி'


  'கன்னடமும் களி தெலுங்கும்
  கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பலவாயிடினும் 

அருமந்த நூலின் கட்டுரைகள் கற்போம்....

 

இற்றைக்கு 56 ஆண்டுகட்கு முன்னர், சென்னை26, வடபழனி அச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்ட நூல் ‘உலகத் தமிழ் மாநாடு மலர்’ - சென்னை 1968. பல்வேறு சிறப்புப் பெருந்தலைப்புகளைத் தாங்கி, உப தலைப்புகளையும் தாங்கி வெளிவந்த நூல் அது.

கொழும்பு - புகையிரத நிலையத்திற்குக் கீழாக அமைந்துள்ள நடைபாதைப் புத்தகக் கடையில் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. வாங்கும்போது சாதாரண நிலையில் இருந்தது. இன்று தாள்கள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு

தமிழன் பயன்படுத்திய இசைக்கருவிகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தமிழ் இசைக்கருவிகள் என்பன தமிழர் பயன்படுத்திய இசைக் கருவிகளாகும். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர், பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அக்காலத்தியத் தமிழர் தம் இசைத்திறத்தை எடுத்தியம்புகின்றன. யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர்,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

   பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

ஆதி காலத்தில் திறந்த வௌிகளில் மனிதர்கள் வசித்து வந்தனர். பின்னர் குகைகளில் வசிக்கக் கற்றுக் கொண்டனர். அவர்கள் கற்களைக் கூர்மையாக்கி அதை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கூர்மையான கல் ஆயுதமே மனிதர்களின் முதல் எழுதுகோலாகும். அந்தக் கூரிய கல்லை எழுதுகோலப் போல் பயன்படுத்தி, தாங்கள் வசித்த குகைச் சுவர்களில் சித்திரங்களை வரைந்தனர். அச்சித்திரங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கையையும்

திங்கள், 24 பிப்ரவரி, 2025

தொடர்மொழிக்கு ஒருமொழி 2

  1. வயோதிபம் அடைந்து இறக்காமல் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மரணம் நிகழுதல் - அகால மரணம் 
  2. வௌிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது - அங்கதம்
  3. அறிஞர்கள் பலர் கூடிய சபை நடுவே புதிதாக உருவாக்கப்பட்ட நூலை அல்லது கலை நிகழ்வை படித்தோ அல்லது நிகழ்த்திக் காட்டியோ சபையினரை ஏற்றுக் கொள்ளச் செய்தல் -