📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 5 ஜூன், 2025

Swami Vipulananda எனும் பெயரை தமிழில் எழுதுவதில் சர்ச்சையா?

 

A.1.விபுலாநந்தா கல்லூரி.

2.விபுலானந்தா கல்லூரி.

3.விபுலாநந்தாக் கல்லூரி.

4.விபுலானந்தாக் கல்லூரி.


B.1.விக்கினேஸ்வரா கல்லூரி.

2.விக்னேஸ்வரா கல்லூரி.

3.விக்கினேஸ்வராக் கல்லூரி.

4.விக்னேஸ்வராக் கல்லூரி.

வெள்ளி, 23 மே, 2025

அப்பாமாரின் ஏக்கங்கள் என்றுமாய்! - கற்றதில் பிடித்ததும் கற்க வேண்டியதும்

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.
மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார் ஏனெனில் கேட்டுப்

புதன், 7 மே, 2025

மீன் பாடுமா?

மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ   இன்றுவரை அவையவை அப்பெயர் கொண்டு அழைத்தால் அதுவே

சனி, 3 மே, 2025

தரம் 4 - 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் - தமிழ்

 பின்வரும் பந்தியை வாசிக்கவும்.

1.       மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் ஆகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன.

பாலைவனங்கள் ஆண்டுக்கு இருநூற்றைம்பது மில்லி மீற்றருக்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி

வெள்ளி, 2 மே, 2025

காணாமற்போன, சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை இவ்வாறு பெ​றுவது எப்படி?

மிக முக்கியமான கல்வி நடவடிக்கைகளுக்கு, பரீட்சைத் திணைக்களத்தின் பெறுபேற்று அட்டவணை தேவையா?

காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை (Results Sheet) எவ்வாறு பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்வது?

கொழும்பு , பத்தரமுரயிலுள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில்

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

புதன், 9 ஏப்ரல், 2025

பெற்ற மனம் | சிறுகதை - ஹாலித் பைரூஸ்

    சித்திரைப் புத்தாண்டிற்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாதம் விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் புத்தகப்பையைத் தோளில் சுமந்தவாறு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வந்து நின்ற பேருந்தில் ஏறிய சுமந்திரனுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. ஒரு இருக்கையில் வயதான முதியவர் ஒருவரும் பக்கத்தே அவரது வயதான மனைவியும் அமர்ந்திருந்தனர். அவ்விரு ஆசனங்களையும் தவிர ஏனைய அனைத்து ஆசனங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. வழமைக்கு மாறாக இன்று இப்படி இடம் கிடைத்தது பற்றி அவனால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. வேறு நாட்களில் நின்றுகொண்டுதான்

வியாழன், 3 ஏப்ரல், 2025

இலங்கைத் தமிழ் படைப்புலகில் அல் அஸூமத் என்ற ஆளுமை!

இலங்கையின் புகழ்பூத்த, காலத்தால் பேசப்பட வேண்டிய ஆளுமைகள் பற்றி பாடசாலை மாணாக்கரும்... ஏன் ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டியவர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது தேவைப்பாடானதே. 

அதற்கேற்ப, பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கைத் தமிழ் படைப்புலகில் அல் அஸூமத் என்ற ஆளுமை' பற்றிய கட்டுரை 'தமிழ்ச்சுடர்' தளத்தில் இற்றைப்படுத்தப்படுகிறது.

நன்றி - மு. சிவலிங்கம்

அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா போட்டி நிகழ்ச்சிகளில் திருத்தங்கள்

 அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் - 2025 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக தமிழ்மொழிப் பாட இணைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதற்கேற்ப, 2025 ஆம் ஆண்டுக்கான இணைப்பு மற்றும் 35/2018 சுற்று நிரூபத்தைப் பயன்படுத்தும்போது சில திருத்தங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இணைப்பினைப்பினைப் பார்க்கவும். (சுற்றுநிரூபமும் இணைக்கப்பட்டுள்ளது.)


புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.