📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 18 ஜனவரி, 2025

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3

பின்வரும் பந்தியை வாசிக்க.

            நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது  போலக் காட்சியளித்தது.

 01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.

1) கல்விச் சுற்றுலாவிற்காக மாணவர்களை அழைத்துச் சென்ற இடம் எது?

........................................................................................

2) எழில் எனும் சொல்லுக்கான ஒத்த கருத்துச் சொல் யாது?

....................................................

3) தூரத்தில் நின்று  பார்த்தபோது எது படுத்திருப்பது போலக் காட்சியளித்தது?

...........................................................

4) தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த அரசன் யார்?

...........................................................

5) மறைந்திருந்து எனும் சொல்லைப் பிரித்து எழுதுக.

.........................................................

6) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள உவமானத்தை எழுதுக.

........................................................


2) தரப்பட்டுள்ள கருத்துக்களைப் புலப்படுத்தும் பழமொழிகளை எழுதுக.

1. எதையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

..........................................................................................

2. சேமிப்பின் மகிகை


3) கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் இருக்கும் வெற்றிடத்திற்குப் பொருத்தமான வினைச் சொல்லை அடைப்பிற்குள் இருந்து தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.

1. குற்றவாளிகளைத் திருத்துவதற்கு சிறு தண்டனை ........................... (வழங்கப்படுகின்றது /  வழங்கப்படுகின்றன)

2. தொழிற்சாலைக் கழிவுகளால் சூழல் ....................................  (மாசுபடுகின்றன / மாசுபடுகின்றது)

3. சிறந்த நூல்கள் நல்ல நண்பர்களைப் ............................... (போன்றது / போன்றன)

4. மான்கள் கூட்டமாகச் ...................................... (சென்றது / சென்றன)


4) தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.

அருமையையும் / அவரின் / பின்னரே / ஒருவரது / பெருமையையும் / அறிய / மரணத்தின் / முடிந்தது

..........................................................................................................................................


5) 

1. பின்வரும் ஒருமை வாக்கியத்தைப் பன்மை வாக்கியமாக மாற்றி எழுதுக.

அணில் குஞ்சு அழகாக இருக்கும். ..........................................................................

2. பின்வரும் பன்மை வாக்கியத்தை ஒருமை வாக்கியமாக மாற்றி எழுதுக.

மரங்கள் காற்றில் அசைந்து ஆடின. ..............................................................................


6) பின்வரும் வெற்றிடங்களை நிரப்புக.

1. அறிஞர்கள் ஒன்றுசேர்ந்து வாதிடும் களம் ...............................................

2. மயில் அகவும் எனின், சிங்கம் ..............................................

3. குதிரையின் ஆண் குண்டு என்பது போல நண்டின் ஆண் ..............................


7) பின்வரும் வாக்கியங்களை எழுத்து மொழியில் எழுதுக.

1. பசுக்கள் புல் மேஞ்சன. ........................................................

2. நான் தேத்தண்ணி குடிச்சேன். ..................................................


8) பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.

கவனமாகச் செவிமடுத்துக் கூறும் வேலைகளைச் செய்யப் பழகுங்கள் என்று ஆசிரியை கூறினார்


9) 

1. பின்வரும் இணைமொழிகளைப் பூர்த்தி செய்க.

1. நோய் ............................. 

2. காடு .................................

2. மரபுத் தொடரின் கருத்தை எழுதுக.

முன்னுக்கு வருதல் ............................................


10) அடைப்புக்குள் காணப்படும் சொற்களிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.

1. பெயர்ச்சொற்கள் இரண்டின் கீழ்க் கோடிடுக.

(எனது / இலைகள் / இல்லை / தண்டுகள்)

2. வினைச்சொற்கள்  இரண்டின் கீழ்க் கோடிடுக.

(தண்டுகள் / உண்பேன் / போவேன் / சூரிய ஔி)

3. பெயர் அடைமொழிகள் இரண்டின் கீழ்க் கோடிடுக.

(நீண்ட / மட்டும் / சிறிய / பதார்த்தம்)


11) பின்வரும் விடுகதைகளுக்குப் பொருத்தமான விடைகளை வெற்றிடங்களில் எழுதுக.

1. மொட்டைப் பாட்டிக்கு உச்சியிலே குடுமி. அது என்ன? ...............................

2. என்னை நீங்கள் பார்க்கலாம்... தொடலாம்... ஆனால் பிடிக்க முடியாது நான் யார்? ................................



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக