📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 2 ஜனவரி, 2025

தரம் 5 - தமிழ் - பந்தியை வாசித்து விடையளித்தல் - கடந்த கால வினாக்கள்

1. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2012 கடந்த கால வினாத்தாள்)

     நல்ல நண்பன் போல நல்ல புத்தகம் எமக்கு நல்வழி புகட்டும். மாணவப் பருவம் கிடைப்பதற்கு அரியத. அதனால் அப்பருவத்தைப் பிரயோசனம் உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்தூன்றி வாசித்தல் வேண்டும். 

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தேர்ந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. கிடைப்பதற்கு அரியது எது? ............................................................

2. தேடிப்பெற்ற நல்ல புத்தகங்களை எவ்வாறு படித்தல் வேண்டும்? ......................

3. பயன் என்பதன் ஒத்தகருத்துச் சொல்லை எழுதுக. ..............................

4. எளியது என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக..............

5. இங்கு இடம்பெற்றுள்ள உவமானத்தை எழுதுக. .......................................

6. முதலாம் வாக்கியத்திலுள்ள அடைமொழிச் சொல் ஒன்றினை எழுதுக. ....................................

2. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2013 கடந்த கால வினாத்தாள்)

எத்தனை விதம் விதமான பழங்களை நீங்கள் எனக்குத் தந்திருக்கின்றீர்கள். ஆனாலும் சுதந்திரமாகப் பறந்து திரிந்து மரங்களிலே பழுத்திருக்கும் கனிகளைக் கொத்தித் தின்பதிலுள்ள சுவை இதிலே கிடைத்திடுமா? முன்பு எல்லாம் சின்னஞ்சிறிய வயிற்றுக்கு உணவாகத் தானியங்களையும் தேடிச் செல்வேன். பரந்த வயல் வௌிகள் எமது நிறத்தைப் போலவே பசுமையாகக் காட்சியளிக்கும்.கதிர் சுமந்த நெல்லினங்கள் எம்மைத் தலை அசைத்து வரவேற்கும். 

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. எம்மைத் தலையசைத்து வரவேற்பன எவை என இப்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

..........................................................

2. விசிறியும் சுழியும் இடப்பட்டுள்ள ஒரு சொல்லை பந்தியில் இருந்து கண்டு பிடித்து எழுதுக.

..........................................................

3. இப்பந்தியில் இடம்பெறும் ஒத்தகருத்துள்ள சொற்கள் இரண்டை எழுதுக.

..........................................................

4. பின்பு என்பதன் எதிர்க்கருத்துள்ள சொல்லை எழுதுக.

..........................................................

5. இப்பந்தியில் இடம்பெறும் முன்னிலைப் பன்மைச் சொல்லை எழுதுக.

..........................................................

6. இப்பந்தியி்ல் கையாளப்பட்டுள்ள உவமானத்தை எழுதுக.

...............................................

3. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2014 கடந்த கால வினாத்தாள்)    

        நமது நாட்டின் மலை நாட்டுப் பகுதிகளிலும் ஒரு சில தாழ் நிலப் பிரதேசங்களிலும் தேயிலை பயிரிடப்படுகின்றது. தேயிலை பயிரிடப்படுகின்ற இடங்களைத் தோட்டங்கள் என அழைப்பார்கள். பல நூறு ஏக்கர்கள் கொண்ட நிலப்பரப்புக்களில் தேயிலை நிரை நிரையாக வளர்க்கப்படுவதால் மலை எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் பசுமை படர்ந்து அழகாகக் காட்சி தரும். எமது நாட்டிற்குத் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகளவு வருமானம் கிடைக்கின்றது. 

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. தேயிலை பயிரிடப்படுகின்ற இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

..........................................................

2. மடக்கேறும் அரவும் உடைய எழுத்துக் கொண்ட ஒரு சொல்லைப் பந்தியில் இருந்து கண்டுபிடித்து எழுதுக.

..........................................................

3. குன்று என்பதற்குரிய ஒத்தகருத்துச் சொல்லைத் தெரிவுசெய்து எழுதுக.

..........................................................

4. இறக்குமதி என்பதன் எதிர்க்கருத்துச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

..........................................................

5. எமது நாட்டிற்கு அதிக வருமானத்தைப் பெற்றுத் தருவது எது?

..........................................................

6. இப்பந்தியில் இடம்பெறும் உவமானம் ஒன்றை எழுதுக.

..........................................................

4. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2015 கடந்த கால வினாத்தாள்)    

        பாடசாலை மாணவர்கள் ஆகிய நாங்கள் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு பின்னவல என்ற இடத்திலுள்ள யானைகள் சரணாலயத்திற்குச் சென்றோம். அங்கு யானைகள் குளிப்பதும் தும்பிக்கையால் தண்ணீரை விசிறுவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு கண்டிமாநகருக்குச் சென்றோம். இயற்கை எழிலோடு சேர்ந்த ஓர் அழகிய நகரம் அது. பூத்துக் குலுங்கும் மரங்களும் தெப்பக்குளமும் அருகே தலதா மாளிகையின் தங்கக்ரையும் கண்டி மாநகரை தேவலோகம் போலத் திகழச் செய்தது. 

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. மாணவர்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டு எவ்வெவ் இடங்களுக்குச் சென்றனர்?

......................................................................................................

2. கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் என்னும் கருத்தைத் தரும் சொல்லை எழுதுக.

......................................................................................................

3. தன்மைப் பன்மைச் சொல் ஒன்றைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.

......................................................................................................

4. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு ஆகிய இரண்டும் இடம்பெறும் வினைச்சொல்லைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.

......................................................................................................

5. தங்கக்கூரை என்பதைப் பிரித்து எழுதுக.

......................................................................................................

6. பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள உவமானத்தை எழுதுக.

......................................................................................................

4. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2016 கடந்த கால வினாத்தாள்)    

        பாரி என்ற மன்னன் தாவரங்களிடமும் பிராணிகளிடமும் இரக்கமும் அன்பும் வைத்திருந்தான். ஒருநாள் பாரி தன் தேரிலேறிக் காட்டு வழியே சென்றான். செல்லும் வழியில் செழித்து வளர்ந்த முல்லைக் கொடியைக் கண்டான். அக்கொடி பற்றிப் படர்வதற்கு கொழுகொம்பின்றித் தவித்தது. வேகமாக வீசும் காற்றினால் அங்குமிங்கும் அசைந்தாடியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. பாரியின் குணவியல்பு ஒன்றை எழுதுக.

.....................................................................................................

2. பற்றிப் படர்வதற்கு கொழுகொம்பின்றித் தவித்தது எது?

.....................................................................................................

3. மெதுவாக என்னும் சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.

.....................................................................................................

4. விசிறியும் சுழியும் கொண்ட எழுத்தையுடைய சொல்லைப் பந்தியிலிருந்து பந்தியிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

.....................................................................................................

5. பந்தியில் குறிப்பிடப்படும் இணைமொழியை எழுதுக.

.....................................................................................................

5. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2017 கடந்த கால வினாத்தாள்)    

        நாம் எப்பொழுதும் சுத்தமாக இருப்பதோடு எமது வீட்டையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசாமல் ஒரு கூடையில் இட்டு அல்லது கிடங்கு ஒன்றில் புதைத்து குப்பை கூளங்களற்ற சுற்றாடல்  ஒன்றினை எம்மால் அமைக்க முடியும். கூடைகளில் இட்டு வைக்கின்ற குப்பைகளை உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் சேகரிக்க வரும்போது அவர்களிடம் கையளிக்க வேண்டும். இதன் மூலம் பல கொடிய நோய்களிலிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். எமது நாட்டைப் பொறுத்தவரையில் சுத்தம் பேணுதல் ஓர் இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியில் இருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

1. இப்பந்தியில் எதனைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிக் கூறப்படுகின்றது?

..........................................................................................................................................

2. குப்பை கூளங்களற்ற சுற்றாடல் ஒன்றினை அமைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையைக் குறிப்பிடுக.

..........................................................................................................................................

3. குழி என்பதன் ஒத்த கருத்துச் சொல்லினைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.

..........................................................................................................................................

4. நாங்கள் என்பதன் படர்க்கைச் சொல்லைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து எழுதுக.

..........................................................................................................................................

5. உள்ளூராட்சி என்பதைப் பிரித்தெழுதுக.

..........................................................................................................................................

6. பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைமொழியை எழுதுக.

..........................................................................................................................................

5. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2018 கடந்த கால வினாத்தாள்)    

        மனிதர் வாழ ஆகாரம் அவசியமாகும். மனிதர் உண்ணும் உணவுகளுள் சோறு, உரொட்டி, கிழங்கு வகைகள் போன்றவை சக்தி தரம் கூட்டத்திலும் பால், முட்டை, மீன், பருப்பு போன்றவை வளர்ச்சிக்கு உதவும் உணவுக் கூட்டத்திலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவை பாதுகாப்புக்கு உதவும் உணவுக் கூட்டத்திலும் அடங்கும். இம்மூன்று கூட்டங்களும் அடங்கியுள்ள கலப்பு உணவோடு சுத்தமான நீர், போதுமான அளவுக்கு உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும்.

பந்தியை மாத்திரம் துணையாகக் கொண்டு விடையளிக்குக.

1. சக்தி தரும் கூட்டத்தைச் சேர்ந்த ஓர் உணவை எழுதுக.

.......................................................................................................................

2. சக்தி தரும் கூட்டம் அல்லாத இரண்டு உணவுக் கூட்டங்களையும் எழுதுக.

.......................................................................................................................

3. 'உணவு' என்பதற்கு ஒத்த கருத்துள்ள சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

......................................................................................................................

4. ஆரோக்கிய வாழ்க்கைக்கு, கலப்பு உணவுக்கு மேலதிகமாக உட்கொள்ள வேண்டியது யாது?

.......................................................................................................................

5. இப்பந்திக்கு மிகவும் பொருத்தமான தலைப்பைத் தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.
1) ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பொருத்தமான உணவுகள்
2) ஆரோக்கிய வாழ்க்கைக்காக நீர் பருகுதல்.
3) கலப்பு உணவைச் சேர்ந்த உணவுக் கூட்டங்கள்

6. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2019 கடந்த கால வினாத்தாள்)    

        கானகமெங்கும் சூழ்ந்துள்ள அமைதியைப் பறவைகளின் நாதம் கலைக்கிறது. அங்குமிங்கும் செல்லும் மயில்களால் கானகம் வண்ணமயமாகின்றது. சுற்றுப்புறத்தை அவதானித்து மிகக் கவனமாகச் செல்லும் மான் கூட்டம் குளக்கரையில் நீரைப் பருகுகின்றது. மரஞ்செடி கொடிகள் நிறைந்த சூழலைத் தழுவிச் செல்லும் தென்றல் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றது. 

பந்தியை மாத்திரம் துணையாகக் கொண்டு விடையளிக்குக.

1. கானகத்தை வண்ணமயமாக்குவது எது?

..............................................................................................................

2. இணைமொழி ஒன்றினைத் தருக.

..............................................................................................................

3. 'காற்று' என்பதன் ஒத்த கருத்துச் சொல்லை எழுதுக.

..............................................................................................................

4. கானகத்தில் சூழ்ந்துள்ள அமைதி கலையக் காரணம் யாது?

..............................................................................................................

5. நீரைப் பருகும் மான்களின் இயல்பு எவ்வாறு விளக்கப்படுகிறது?

..............................................................................................................

6. இப்பந்திக்கு மிகவும் பொருத்தமான தலைப்பைத் தெரிவுசெய்து அதன் கீழே கோடிடுக.

    1. கானகத்தின் குளிர்ச்சி

    2. கானத்தின் அழகு

    3. கானகத்தில் வாழும் பிராணிகள்

7. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2020 கடந்த கால வினாத்தாள்)    

        வயல் வரம்பில் அமர்ந்திருந்த ராஜாவைப் பார்த்த சந்திரனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ராஜாவுடன் விளையாடுவதற்காகச் சந்திரன் ஆர்வத்தோடு வயல் பக்கமாக ஓடோடிச் சென்றான். அத்துடன் வர்ணமயமான பறவையைப் போன்று வானத்தில் பறந்து செல்லும் பட்டத்தைக் கண்ட சந்திரன் பெருமகிழ்ச்சியடைந்தான். தனது பட்டத்தின் நூல் அறுந்து தொலைவில் செல்வதாக ராஜா கவலையுடன் தனக்கு அருகில் வந்த சந்திரனுக்குக் கூறினான். வானத்தில் அசைந்து தொலைவில் செல்லும் பட்டத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜாவின் கண்களில் கண்ணீரைக்கண்ட சந்திரன் 'நாங்கள் இன்னுமொரு பட்டத்தைச் செய்வோம்' என்று ஆலோசனை கூறினான். 

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை எழுதுக.

1. சந்திரன் எதற்காக வயலை நோக்கி ஓடிச் சென்றான்?

...................................................................................................................

2. விரைவாகச் சென்றதைக் குறிப்பிடுவதற்குப் பந்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் எது?

...................................................................................................................

3. சந்திரனுக்குப் பட்டம் எதைப் போன்று காட்சி அளித்தது?

...................................................................................................................

4. 'கவலை' என்பதன் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.

...................................................................................................................

5. ராஜாவின் பட்டம் வானத்தில் அசைந்து தொலைவில் செல்லக் காரணம் யாது?

...................................................................................................................

6. 'நாங்கள் இன்னுமொரு பட்டத்தைச் செய்வோம்' என்று சந்திரன் ஆலோசனை கூறியது ஏன்?

...................................................................................................................

6. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2021 (2022) ) கடந்த கால வினாத்தாள்)    

        ஒருநாள் எங்கள் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் நடைபெற்றது. சிரமதானம் செய்வதற்கான அடிப்படை நோக்கம் பாடசாலைத் தோட்டத்தைச் சுத்தம் செய்வதாகும். பூப்பாத்திகளை அமைத்தல், பாடசாலை வளவினுள் உள்ள பொருட்களை உக்குகின்றவை, உக்காதவை எனத் தெரிந்து வேறுபடுத்துதல், குப்பை கூழங்களை அகற்றுதல் ஆகிய செயற்பாடுகள் அங்கு இடம்பெற்றன. இதன்பொருட்டு பெரியவர்கள். சிறியவர்கள் அனைவருமே மிகுந்த விருப்பத்துடன் பங்குபற்றினர். பங்குபற்றிய அனைவருக்கும் அதிபர் அவர்கள் நன்றி கூறியதுடன் நிகழச்சித்த திட்டம் நிறைவடைந்தது. எனது பாடசாலை இப்போது எவ்வளவு அழகாயிருக்கின்றது என்று எனக்குத் தோன்றியது. 

பந்தியை மாத்திரம் துணையாகக் கொண்டு விடையளிக்குக.

1. சிரமதானத்தில் பங்குபற்றியவர்கள் யாவர்?

..............................................................................................................

2. சிரமதானம் செய்வதற்கான அடிப்படை நோக்கம் யாது?

..............................................................................................................

3. சிரமதானத்தின்போது நடைபெற்ற செயற்பாடு ஒன்றை எழுதுக.

..............................................................................................................

4. 'நீக்குதல்' என்பதன் ஒத்த கருத்தைக் குறிப்பிடுவதற்காக பந்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது எது?

..............................................................................................................

5. பந்தியில் இடம்பெற்றுள்ள அடைமொழிச் சொல் ஒன்றை எழுதுக.

..............................................................................................................

6. பாடசாலை பற்றி மாணவனுக்குத் தோன்றியது யாது?

..............................................................................................................

(தொடரும்....)

அன்புப் பெற்றோர்களே! மாணவர்களே!

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தத் தளம் பற்றி அறிமுகப்படுத்துங்கள். 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றாற் போல நீங்களும் செயற்படுங்கள்.. தமிழ்மீது அளவுகடந்த காதல் கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளை கட்டாயம் பின்னூட்டமாய்இடுங்கள்...

-தமிழன்புடன்,

கலைமகன் பைரூஸ்

--------------------------------------------------------------------------------------------------------------

புலமைப் பரிசில் பரீட்சை | புலமைப் பரிசில் | தரம் 4 தமிழ் | தரம் 5 தமிழ் | பந்தியை வாசித்து விடை எழுதுதல் | கடந்த கால வினாக்கள் | தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் கடந்த கால வினாக்கள் | கலைமகன் பைரூஸ் | தமிழ்ச்சுடர் 

--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக