📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 27 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான

முறையில் எழுதப்பட்டுள்ளதாக ஆசிரியர் என்னைப் பாராட்டினார். சுதனின் தினக்குறிப்பை நாங்களும் வாசிப்போம். அதன்படி எழுதிப் பழகுவோம்.

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

1. வகுப்பாசிரியர் யாரைப் பாராட்டினார்?

.......................................................

2. நாட்குறிப்பு என்பதன் ஒத்த கருத்துச் சொல் யாது?

.....................................................

பந்தியிலுள்ள தன்மை பன்மைச் சொல்லைத் தெரிந்து எழுதுக.

....................................................

4. குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலை எது?

...............................................

5. தீமைகள் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.

..............................................................

6. 'தினக்குறிப்பை நாங்களும் வாசிப்போம்' என்பதனை இறந்த காலத்தில் எழுதுக.

.................................


02.கீழே தரப்பட்டுள்ள சொற்களில் எழுத்துக்கள் இடம் மாறியுள்ளன. அவ்வெழுத்துக்களைத் திருத்தி மீண்டும் சரியான சொற்களை எழுதுக.

1. செழ்தமிந் ...................................... 2. வபோக்ரகுத்து ............................................

03. தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியம் ஒன்று எழுதுக.

குடம்பியாக / இருக்கும்போது / நான் / இருக்கும் / மயிர்கள் / உடம்பில்


.................................................................................................................................................


04. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய், பயனிலைத் தொடர்பு சரியாயின் (சரி) எனவும், பிழையாயின் (பிழை) எனவும் எதிரேயுள்ள அடைப்புக்குறிக்குள் அடையாளம் இடுக.

  1. கதிரை அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லாகும். ( )
  2. சிறுமி உயர்திணை பெண்பாற் சொல்லாகும். ( )
  3. கிளிகள் உயர்திணைப் பன்மைச் சொல்லாகும். ( )
  4. புத்தகம் அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லாகும். ( )

05. கீறிட்ட இடங்களில் பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.

    பெரியவரே தக்காளி கிலோ என்ன விலை

06. பின்வரும் பழமொழியைப் பூர்த்தி செய்யப் பொருத்தமான சொல்லைக் கீறிட்ட இடத்தில் எழுதுக.

   1)  முற்பகல் ................................................. பிற்பகல் விழையும்.

   2) பின்வரும் வாக்கியத்திற்குப் பொருத்தமான பழமொழியைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.

    பயிரிடுவதற்கு முன் மண்ணை ஆழமாகப் பண்படுத்த வேண்டும்.

    ...........................................................................................................................................

07. தரப்படும் ஆத்திசூடி வௌிப்படுத்தும் கருத்தை எழுதுக.

    வித்தை விரும்பு .....................................................................................

08. பின்வரும் வாக்கியத்தை பன்மை வாக்கியமாக மாற்றி எழுதுக.

    நீ சித்திரப் போட்டிக்குப் போவாயா?

    ..............................................................................................................................................

09. தரப்பட்டுள்ள குறுக்கெழுத்துக்கட்டங்களை பூரணப்படுத்துக.

    இடமிருந்து வலம்
    ---------------------------
    1. அறிவைத் தருவது

    2. இரும்புப் பாதையில் பயணம் செய்வது

    மேலிருந்து கீழ்
    -----------------------
    1. நிறங்களில் ஒன்று

10. பொருத்தமான விடையைத் தெரிவுசெய்து எழுதுக.

    பொலித்தீன், பிளாஸ்திக் பொருட்களை கண்ட இடங்களில் வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ........................................
    (அறிவுறுத்தல் / அறிவித்தல் / கட்டளை) ஆகும்.

---------------------------------------

தரம் 5 | புலமைப்பரிசில் பரீட்சை | கலைமகன் பைரூஸ் | தமிழ்ச்சுடர் | scholarship examination | tamil | தமிழ் கற்போம் | மொழித்திறன் விருத்திச் செயற்பாடு

----------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக