2- அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால், அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்.
3- நீங்கள் அவரை மெளனமாக பார்த்தால், அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
4-மகிழ்ச்சியாக நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றால் உங்களை மகிழ்விக்க தந்தை இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
5- அவர் பெருமூச்சு விடுவதைப் பார்த்தால், அதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
6- அவர் சந்தோஷமாக சிரிப்பதை நீங்கள் பார்த்தால் அவரை
மகிழ்ச்சிப்படுத்தியது நீங்கள் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
7- அவரை மனச்சோர்வுடன் பார்த்தால், அவருடைய அறிவுரையை நீங்கள் பின்பற்றாததே காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
8- அவர் அறைக் கதவை மூடிக்கொண்டு இருந்தால், அவர் உங்களை நினைத்து அழுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9 - நீங்கள் அவரை நோக்கி உங்கள் குரலை உயர்த்திப் பேசினால், நீங்கள் அவரை உயிருடன் கொல்லுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
10 - நீங்கள் நெருக்கடியிலும், வேதனையிலும் இருந்தால், உங்கள் தந்தை உங்கள் மீது கோபமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
11 - அவர் படுக்கையில் கால் நீட்டி ஆடாமல் அசையாமல் பேசாமல் படுத்திருப்பதை நீங்கள் கண்டால், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பெரிய அடித்தளத்தை இழந்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!!!
-அரபு இணையதளத்திலிருந்து
------------------------------------------------
(தமிழ்ச்சுடர் | கலைமகன் பைரூஸ் | இலக்கணம் | இலக்கியம் | தரம் 4 - 13 தமிழ் | thamilshshudar | Kalaimahan Fairooz | tamil grammar | tamil literature | Grade 4 -13)
------------------------------------------------
x
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக