விவாதம் என்பது தனிநபர் அல்லது குழுவினர் தங்கள் கருத்துக்களை நியாயமாகவும், தர்க்கபூர்வமாகவும், மரியாதையுடனும் எதிர்வாதிக்கக் கூடிய ஒரு அறிவுப் பேட்டியாகும். மாணவர்களின் சிந்தனைத் திறனை விருத்தி செய்யும் பயனுள்ள செயலே விவாதப் போட்டி, இன்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கலாசார அமைப்புகள் மற்றும் ஊடகத்துறையிலும் மிகுந்த முக்கியத்துவத்துடன்விவாதப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
விவாதப் போட்டியின் நோக்கம்:
மாணவர்களில் தர்க்கவாதத் திறனை வளர்த்தல்.
எதிர்மறை, சாதகக் கோணங்களில் சிந்திக்க வைக்குதல்.
உரைநடை திறனையும், சிந்தனையையும் ஊக்குவித்தல்.
சமுதாயப் பிரச்சனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
போட்டியின் கட்டமைப்பும் ஒழுங்கும்:
கருத்துப்பொருள் தேர்வு:
சமூகப் பிரச்சனைகள், அரசியல், கல்வி, அறிவியல், கலாசாரம், ஆளுமை, மொழி, பழக்கம் போன்றவற்றில் இருந்து தேர்வு செய்யப்படும்.
இரு அணிகள்:
ஒவ்வொரு தரப்பும் (சாதக-எதிர்மறை) ஒரு குழுவாக அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவும் 2 முதல் 3 உறுப்பினர்களுடன் இருக்கும்.
நேர அளவு:
ஒவ்வொரு குழுவிலிருந்தும் தலைவருக்கு ஆரம்ப உரைக்காக 5 நமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஏனைய இருவருக்கு 3 நிமிடங்கள் வீதம் வழங்கப்படும். ஈற்றில் முதலில் ஆரம்ப உரை நிகழ்த்தியவர் தன்னுடைய முடிவுரையை இரண்டாவதாக வழங்குவர்.
முன்னாயத்த வகுப்புகள்:
போட்டிக்கு முன், மாணாக்கருக்கு அல்லது தங்களது குழுவினருக்கு வழிகாட்டும் வகையில் ஆராய்ச்சி மற்றும் தர்க்கவாத நெறிகள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நடுவர்கள் (Judges):
மொழித்திறன், தர்க்கவாதத் திறன், அடுக்கமான வெளிப்பாடு, நேரம் பின்பற்றுதல், எதிர்வினை திறன், பொதுக் கண்ணோட்டம் போன்றவை அடிப்படையாக மதிப்பீடு செய்வர்.
பொது விவாதங்களில் எதிர்பார்க்கப்படும் சில விடயங்கள் வருமாறு:
- தலைப்பிற்கேற்ற விடயம் (15 புள்ளிகள்)
- பேச்சுவன்மை (15 புள்ளிகள்)
- சமயோசித வாதத்திறன் (20 புள்ளிகள்)
- குழுவொருமைப்பாடு (10 புள்ளிகள்)
- நிலை, மெய்ப்பாடு (10 புள்ளிகள்)
- மொழியாளுமை (10 புள்ளிகள்)
- விமர்சிக்கும் திறன் (10 புள்ளிகள்)
- அவையீர்ப்பு (05 புள்ளிகள்)
- நேரத்திற்குள் விடய அடக்கம் (05 புள்ளிகள்)
நடுவர்களின் தீர்ப்பில் ஏனையோர் உட்புகலாமா?
இது முக்கியமான கேள்வி. ஒரு போட்டியின் வெற்றி-தோல்வி முடிவுக்கு நடுவர்களின் கருத்தே இறுதியானது என்பது ஒவ்வொரு போட்டியின் அடிப்படை விதிகளின் ஒன்று. ஆனால்:
நடுவர்கள் நியாயமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர்கள் தரப்பினரிடையே சார்பில்லாமல் செயல்பட வேண்டும்.
துணிப்பான மதிப்பீடு அளிக்க வேண்டும்.
சிலநேரங்களில் தங்களை அறியாமலேயே துளிப் பிரச்சினை நடந்தாலும், அதனை சூட்சுமமாக எடுத்துக்கூறி நன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை:
முடிவை மரியாதையுடன் ஏற்க வேண்டும்.
எதிரணியைப் பகைவர்களாகப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
'தோல்வி' என்பது வளர்ச்சிக்கான வாய்ப்பு என்பதை உணர வேண்டும்.
மாணாக்கருக்கான சில ஆலோசனைகள்:
முடிவுரை:
விவாதப் போட்டி என்பது வெறும் வாக்குவாத நிகழ்வல்ல; அது நம் நாகரிக உரையாடலை வளர்க்கும் ஒரு அகப்பாடசாலை. அதனால், ஒழுங்கும், மதிப்பீடும், ஒத்துழைப்பும் இம்முனைவை பலப்படுத்தும். நடுவர்கள் மனிதர்கள் என்பதால்தான் முடிவுகள் பாதிக்கப்பட்டுவிடலாம். ஆனால் அவற்றை நாகரிகம் மற்றும் மரியாதையுடன் எதிர்கொள்வதுதான் உண்மையான அறிவுப் போட்டியாளரின் அறிகுறி.
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
02.07.2025
இங்கு ஆங்கிலக் கட்டுரை ஒன்றும் அதன் மொழிபெயர்ப்பும் இணைக்கப்படுகிறது. மேலதிக வாசிப்பிற்காக.... #கலைமகன்
------------------------------
📝 Debate Competition – A Comprehensive Essay
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக