முஸ்லிம்களின் நூல் நிலையங்கள்
மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள்.
உயர்ந்த எண்ணம் இருந்து வருவதனாற்றான் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தாங்கள் கண்டுபிடித்த நவீன சாதனங்களின் வரலாறுகளை நூல் வடிவில் எழுதியிருப்பதோடல்லாமல், மற்றவர்களுக்கும் பயிற்சியளித்து அவர்களையும் மென்மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் பண்டைத் தமிழ்ப் பெரியார்களிற் சிலர். அறிவு, ஆற்றல், புலமை, ஆய்வுத்திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிவிருந்தும், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியம், இயல், இசை, நாடகம் முதலியன அவர்களது குறுகிய மனப்பான்மையினாலும், அவற்றைச் சரிவர எழுதிவைக்கத் தவறியமையினாலும், அவற்றை அறிந்தவர் அழிந்தொழிந்ததன் பின்னர் அவையும் மறைந்தொழிந்தன.
இவ்வாறு மறைத்து வைத்திருந்ததற்குக் காரணம் மற்றவர்கள் இந்நுட்பங்களை அறிந்தால் தங்களிலும் பார்க்க அதிக புகழடையக் கூடும் என்ற பொறாமைதான். இவர்களைப் போன்று இந்த இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 'அறிவு வளர்ச்சிக்கு இரும்புத் திரை போடுவதைப் போன்ற துரோகம் உலகில் வேறொன்றுமில்லை' என்பதை அவர்கள் உணரவில்லை.
(தொடரும்)
நன்றி - அந்நூர் 1961
குறிப்பு -
அறபா மகா வித்தியாலத்தின் ஆண்டு மலர் இன்று எத்தனை பேரின் கைகளில் / நூலகங்களில் இருக்கின்றன என்பது கேள்விக் குறியே. என்னிடம் உள்ள புத்தகத்தில் உள்ள அருமந்த கட்டுரைகளிற் சிலவற்றை எனது 'தமிழ்ச்சுடரில்' இற்றைப்படுத்திப் பாதுகாப்பதற்காகவே இந்த ஆக்கம் இத்தளத்தில் இற்றைப்படுத்தப்படுகிறது.
-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
(உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக