📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1

எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகப்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை”

சனி, 18 ஜனவரி, 2025

உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்

 உவமைத்தொடர்

நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும். 

இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன. 

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3

பின்வரும் பந்தியை வாசிக்க.

            நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது  போலக் காட்சியளித்தது.

வியாழன், 16 ஜனவரி, 2025

உயிர்க்குறிகள்

தமிழ் மொழியிலுள்ள உயிர்க்குறிகள் பற்றி தரம் 4, தரம் 5 மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள  வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் உயிர்க்குறிகள் பற்றிய வினாக்களும் இடம்பெறுகின்றன. 

இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது. 

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன? - கோரா பதில் தருகிறது.

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?

இந்த கேள்வியை இரண்டாக பிரிக்கலாம்.

  1. தமிழ் என்றால் என்ன?
  2. வளர்ச்சி என்றால் என்ன?

தமிழ் என்றால் என்ன?

தமிழ் என்பது ஒரு மொழி, அது அதன் அடித்தளமான தொல்காப்பிய சூத்திரத்தின் வழி இயங்கும். அது தமிழ் மொழியின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு விதி, மறுவுதல், திரிதல் உட்பட அனைத்தையும் பேசுகிறது. அதாவது தமிழ்

அளபெடை என்றால் என்ன? அளபெடை எத்தனை வகைப்படும்?

அளபெடை

​செய்யுளொன்றில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ. உயிரளபெடை

ஆ. ஒற்றளபெடை


1.உயிரளபெடை

திங்கள், 13 ஜனவரி, 2025

ஓரெழுத்து ஒருமொழி பற்றித் தெரிந்துகொள்வோம்


அ - எட்டு, அழகு, சிவன்

ஆ - பசு, ஆன்மா, எருது

இ -  அரை'யின் தமிழ் வடிவம்

ஈ - ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி

உ - சிவன், ஆச்சர்யம், இரண்டு (தமிழ்)

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மாதிரி வினாப்பத்திரம் க.பொ.த. (சா.த) 2025 PDF

எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது

திங்கள், 6 ஜனவரி, 2025

இலக்கண வினாப்பத்திரம் 1





அடுக்களை என்பது எப்பிரதேசத்திற்குரிய சொல்லாகும்?

அடுக்களை என்பது குறித்ததொரு பிரதேசத்திற்குரிய சொல்லன்று. அடுக்களை தூய தமிழ்ச்சொல்லாகும். மடைப்பள்ளி ( இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்) , சமையலறை போன்ற பொருள்களையுடைத்தாய் அடுக்களை பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மணிமேகலையில், 'புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது / வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்' என்று வந்துள்ளது. இதற்கு சமையலறை என்று பொருள். 

தற்காலத்தில் அடுக்களை எனும் சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. (கண்டி - தெல்தோட்டையில் எனது வாப்பும்மா சமையலறையை அடுக்கள (மரூஉ) எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)

-கலைமகன் பைரூஸ்