📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 22 பிப்ரவரி, 2025

ஏன் இந்த இடியப்பச் சிக்கல்... விபுலானந்தாக் கல்லூரி சரிதானா?

தமிழ் ஆசிரியர்கள் குழுமத்தில் ஆசிரியர் ஒருவரால் வினவப்பட்டிருந்த வினாவை வைத்தே தலைப்பை இட்டுள்ளேன். அதற்கான விடைகள் / விளக்கங்கள் சில அளிக்கப்பட்டிருந்தாலும், அக்குழுமத்தின் நிறுவுநர் திரு. றபீக் மொஹிடீன் ஆசியர் அவர்கள் அளித்த சிறந்த விளக்கத்துடன் கூடிய விடை அருமந்ததாக இருந்ததால், சகலரும் பயன்படும் நோக்கில் 'தமிழ்ச்சுடர்' தளத்தில் இற்றைப்படுத்துகிறேன். 

வினா இதுதான்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 2

 

Common Flowers

  1. rose - ரோசா
  2. sunflower - சூரிய காந்தி
  3. shoe-flower - சப்பாத்திப் பூ
  4. carnation - காணேசன்
  5. temple flower - விகாரைப்பூ
  6. jasmine - மல்லிகை
  7. lotus - தாமரை
  8. blue sky flower  - நீலோற்பலம் / நீல அல்லிப்பூ

நேரம்... அது இயற்கையின் வரப்பிரசாதம்!

Time... it is nature's gift!

இறைவன் எல்லோருக்கும் தினந்தோறும் அளிக்கின்ற வரப்பிரசாதம் நேரம்.

அந்த பொன்னான நேரத்தை புத்திசாலிகள் முழுவதும் பயனுள்ளதாக உபயோகித்து  அதிகப்படியான  பலனை அடைகிறார்கள்.

அவ்வாறு முழுமையாக உபயோகிக்க  தெரியாமல் இருக்கும் நேரத்தை வீணடித்து  வருந்துபவர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.

சனி, 15 பிப்ரவரி, 2025

​பொன்பூச்சொரியும் பாடலும் பொருளும்

'பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்

நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை

வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக

வாசலிடைக் கொன்றை மரம்.'

மேலுள்ள செய்யுள் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்ட பாடலாகும். இந்தப் பாடல் எழுந்தமைக்கான காரணமும் உள்ளதை நாம்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாப்பத்திரம்

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    மரங்கள் மனித குலத்திற்குச் செய்துவரும் நன்மைகள் கணக்கில் அடங்காதவை. இவை அசுத்த வாயுவான கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்களுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை வௌியிடுகின்றன. சாலை ஓரங்களில் நிற்கும் மரங்கள் நிழல் கொடுத்துப் பயணத்தை இனிமையாக்குகின்றன. உணவாகும்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா? தௌிவுறுத்தவும்.

தமிழாசிரியர்கள் குழுமத்தில் கேட்கப்பட்ட வினாவே. 'உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா?' என்பது. இதற்கான தௌிவினை மதிப்பிற்குரிய றபீக் மொஹடீன் ஆசிரியர் வழங்கியிருந்தார்.

ஆசிரியரின் கருத்துக்கள் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது. 

மரபுப் பெயர்கள்

மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருவதாகும். அவ்வாறு வழங்கப்படுகின்ற சொற்கள் மரபுச் சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

வளையாபதி பற்றித் தெரியுமா?

வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய

வியாழன், 6 பிப்ரவரி, 2025

ஒரு பொருள் குறித்த பல சொற்கள் / பன்மொழிகள்

ஒரே கருத்தைத் தரும் பல சொற்கள் ஒரு பொருள் பன்மொழி அல்லது ஒரு பொருள் குறிக்கும் பல சொல் எனப்படுகின்றது. 

செய்யுள், உரைநடை இலக்கியங்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. 

சொற்களுக்கான பொருள்கள்

1.       ஒளி - சுடர், வெளிச்சம்,  விளக்கு, சோதி, பிரகாசம்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1

Objects in the Classroom

  1. Chair  - கதிரை
  2. cupboard - அலுமாரி
  3. desk - மாணவர் மேசை
  4. blackboard - கரும்பலகை
  5. chalk - வெண்கட்டி
  6. bags - பைகள்
  7. books - புத்தகங்கள்
  8. bottles - போத்தல்கள் (குவளைகள்)
  9. register - மாணவர் பதிவுப்புத்தகம்
  10. record book - பதிவுப்புத்தகம்
  11. table - மேசை
  12. table cloth - மேசைப்புடைவை
  13. broom - தும்புத்தடி