- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
- அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
- அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
- அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.
சனி, 15 மார்ச், 2025
பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் அகர வரிசையில்
திங்கள், 3 மார்ச், 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கி பின்னோக்கி வாரிவிடப்பட்ட கன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின்மேலே கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக்கட்டப்பட்ட வேட்டி - நீண்டு தொங்கும் முழுக் கைச்சட்டை - மார்பிலே குறுக்கே போர்த்தப்பட்ட பொடிநிற ப் போர்வை - காலிலே தொடுதோல் - கையிலே புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு.
ஞாயிறு, 2 மார்ச், 2025
தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன
அ - எட்டு
ஆ - பசு
இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - கவிதைகள் இரண்டு
வானவில்
மண்ணுலகு கடல் , மலை அனைத்தும் உள்ளாக்கியே
வளைந்தது வானவில்! என்னெண்ண வண்ணங்கள்!
விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம்
வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள்
உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும்
சனி, 1 மார்ச், 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்
பின்வரும் பந்தியை வாசியுங்கள்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
சிந்திக்கத்தக்க அருமந்த பழமொழிகள்
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
புதன், 26 பிப்ரவரி, 2025
உலகத் தமிழ் மாநாடு விழா மலர் - நுழைவாயில்
'நுழைவாயில்' என்ற மகுடந்தாங்கி இருந்தாலும், அருமந்த நுழைவாயில் என்பதால் முதன் முதலில் அதனை இங்கே இற்றைப்படுத்துகிறேன்.
பேரறி வாளன் திரு'
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்த குடி'
கவின் மலையாளமும் துளுவும்
உன்உதரத் துதித்தெழுந்தே
ஒன்று பலவாயிடினும்
அருமந்த நூலின் கட்டுரைகள் கற்போம்....
இற்றைக்கு 56 ஆண்டுகட்கு முன்னர், சென்னை26, வடபழனி அச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்ட நூல் ‘உலகத் தமிழ் மாநாடு மலர்’ - சென்னை 1968. பல்வேறு சிறப்புப் பெருந்தலைப்புகளைத் தாங்கி, உப தலைப்புகளையும் தாங்கி வெளிவந்த நூல் அது.
கொழும்பு - புகையிரத நிலையத்திற்குக் கீழாக அமைந்துள்ள நடைபாதைப் புத்தகக் கடையில் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. வாங்கும்போது சாதாரண நிலையில் இருந்தது. இன்று தாள்கள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு