ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் கல்வியிற் தங்கியுள்ளது. அத்தகைய பெருமையை ஈட்டிக் கொடுப்பதற்குக் காரணமாக அமையும் நூல்களை நாம் கண்களைப் போன்று பேணிக் காப்பது கடமையாகும். எனவே நூல் நிலையங்களில் உள்ள நூல்களைக் கிழிக்காமலும், சிதைக்காமலும் பக்குவமாகப் பயன்படுத்துவோம்.
01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.
1. ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் எதில் தங்கியுள்ளது?
2. 'சிறுமை' என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.
3. 'நூல்கள்' என்பதன் ஒத்தகருத்துச் சொல்லை எழுதுக.
4. 'கவனமாக' என்ற கருத்தைத் தரும் சொல்லை எழுதுக.
5. தன்மை, பன்மை, எதிர்கால வினைச்சொல்லை எழுதுக.
02. பின்வரும் பிராணிகளின் தொனிகளை எழுதுக.
1. மயில் -
2. குரங்கு -
03. பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
1. அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்
2. பொறுமையாக இருக்க ஏது அவகாசம்
04. பின்வரும் ஒவ்வொரு வாக்கியமும் சரியாயின் 'சரி' எனவும், பிழையாயின் 'பிழை' எனவும் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
1. பறவைகள் கூட்டமாகப் பறந்தது. ( )
2. ஒவ்வொரு பூக்களும் அழகானது. ( )
3. நாங்கள் வனப்பகுதிக்குக் கால்நடையாகச் சென்றோம். ( )
05. கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் இருக்கும் வெற்றிடத்திற்குப் பொருத்தமான சொல்லின் கீழ்க் கோடிடுக.
1. இந்தப் பூமியைச் சுற்றி ................................. மண்டலம் உள்ளது. (வலி / வளி / வழி)
2. காகம் அங்குமிங்கும் .................................... தேடியது. (இரை / இறை)
06. கீழே தரப்பட்டுள்ள சொற்றொடர்களுக்குரிய தனிச்சொல்லைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.
1. அறிஞர் வாதிடும் களம் ..................................................
2. ஒன்றைப் போல் இருக்கும் மற்றொன்று .........................................
3. நூறாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா .................................
07. பின்வரும் பழமொழிகளைப் பூர்த்தி செய்க.
1. இக்கரை மாட்டுக்கு ..............................................................
2. தவளையும் தன் .....................................................................
08. கீழே தரப்பட்டுள்ளவற்றிற்கு அடைப்புக்குள் இருந்து பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
(நாம், வீடு, மாமா, கற்கள், நான், சிறுவர்கள்)
1. உயர்திணை பன்மை படர்க்கைப் பெயர்ச்சொல் .......................................
2. உயர்திணை தன்மைப் பெயர்ச் சொல் ..........................................
3. தன்மைப் பன்மைப் பெயர்ச் சொல் ................................................
09.
1. இறந்த கால வாக்கியத்தை எதிர்கால வாக்கியமாக மாற்றி எழுதுக.
தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்தனர்.
2. ஆண்பால் வாக்கியமாக எழுதுக.
எனது தங்கை கதை கூறினாள்
10. மரபுத் தொடர்களின் கருத்தினை எழுதுக.
1. நாக்குப் புரளுதல்
2. கதை வளர்த்தல்
11. சுருக்கக் குறியீடுகளின் விரிவினை எழுதுக.
1. இ.பொ.கூ
2. இ.மி.ச
12. ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.
ஆத்திசூடியானது / மிக / இனிமையாகவும் / கற்பதற்கு / இருக்கின்றது / எளிமையாகவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக