மனிதனும் ஓர் இயற்கை. இயற்கையோடு தொடர்பு கொள்ளும்போது மனிதன் ஆற்றல் பெறுகிறான். இயற்கையோடு இணைந்து வாழ்பவருக்கு இயற்கையானது அறிவாகவோ, ஆற்றலாகவோ, செல்வமாகவோ தன்னை வாரி வழங்குகின்றது. இயற்கையை நேசிப்பவர்களிடம் அன்பு மிகுதியாகும். உள்ளத்தில் அழகு பெருக்கெடுக்கும். ஆர்வம் துளிர்விடும். மகிழ்ச்சி பன்மடங்காகும். புதுமை
புலப்படும். கற்பனை மிகும். கண்ணோட்டம் அழகு பெறும். மனம் ஆகாயமாய் விரிவடையும்.01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.
1. இயற்கையோடு தொடர்புகொள்ளும் போது மனிதன் என்ன பெறுகிறான்?
2. 'செயற்கை' என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக.
3. கண்ணோட்டம் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
4. யாரிடம் அன்பு மிகுதியாகக் காணப்படும் என பந்தியில் குறிப்பிடப்படுகின்றது?
5. பந்தியில் காணப்படும் ஒத்தகருத்துச் சோடிச் சொற்களை எழுதுக.
6. கீழ்க்கால், மடக்கேறு, சங்கிலிக்கொம்பு ஆகிய மூன்று உயிர்க்குறிகளும் காணப்படும் சொல்லை, பந்தியிலிருந்து தெரிந்து எழுதுக.
02. அஃறிணை நிகழ்கால பன்மை வினைச்சொல்லைத் தெரிவுசெய்து, அதன் கீழ்க் கோடிடுக.
1. கூவியது 2. பாடுகின்றார்கள் 3. பிரகாசிக்கின்றன
03. தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியம் ஒன்று எழுதுக.
1. அடுத்த / தோற்றுகின்றனர் / எனது / பரிசில் / பரீட்சைக்குத் / பிள்ளைகள் / புலமை / வருடம்
04. பின்வரும் ஒவ்வொரு வாக்கியமும் சரியாயின் 'சரி' எனவும், பிழையாயின் 'பிழை' எனவும் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
1. என்னால் எழுதிய கதையை நண்பன் வாசித்தான். ( )
2. சந்தையில் நிறையப் பொருட்கள் காணப்பட்டது. ( )
05. பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.
1. துரியோதனன் அமைச்சரிடம் நானும் கர்ணனைப் போல் புகழ்பெற யோசனை ஒன்று கூறுங்கள் என்று கேட்டார்
06. பின்வரும் பழமொழியைப் பூர்த்தி செய்யப் பொருத்தமான சொல்லைக் கீறிட்ட இடத்தில் எழுதுக.
1. இளங்கன்று ..................................................
2. ஆத்திசூடிக்கான பொருளை எழுதுக.
பேதமை அகற்று ........................................................................
07. பின்வரும் குறளைப் பூர்த்தி செய்க.
'ஒறுத்தார்க்கு ஒரு நாள் இன்பம் ..........................................
பொன்றும் துணையும் புகழ்'
08. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் உள்ள சரியான எழுத்துக் கூட்டல் உள்ள சொல்லை அடைப்புக்குறியினுள் இருந்து தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
1. அவை (நனையாமல் / நணையாமல்) இருப்பதற்குப் பனை ஓலையால் கூரையும் வேய்ந்தனர்.
2. சனிக்கிழமை எனபதால் சந்தையில் சனக்கூட்டம் (அளை / அளை / அழை) மோதியது.
09. கீழே தரப்பட்டுள்ள கவிதையில் உள்ள வெற்றிடத்தைப் பூரணப்படுத்துக.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் .............................. ...................... போலவே
ஒட்டி உறுவார் உறவு
10. தரப்பட்ட தொடர்களுக்குரிய தனிச்சொல்லை அடைப்புக் குறிக்குள் இருந்து தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.
1. நாக்குப் புரளுதல் என்னும் மரபுத் தொடரின் கருத்து ............................................
(சொன்ன சொல் தவறுதல் / சாக்குப் போக்குச் சொல்லுதல்)
2. ஒன்று போல் இருக்கும் மற்றொன்று ..........................................
(போலி / படியெடுத்தல்)
3. இருபத்தைந்தாவது ஆண்டில் எடுக்கப்படும் விழா ..............................
(பொன்விழா / வௌ்ளிவிழா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக