📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 17 ஜனவரி, 2026

ஒருசொல் பன்மொழி

ஒருசொல் பன்மொழி – (பாடத்திற்குரிய முக்கிய சொற்கள்)

ஒருசொல் பன்மொழி என்பது ஒரு சொல்லுக்குப் பல சமமான பொருள் தரும் சொற்கள் ஆகும். தரம் 4 முதல் தரம் 13 வரையிலான மாணாக்கருக்குப் பயன்படும் முக்கிய சொற்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

ஒருசொல் பன்மொழி (பல சொற்கள்)
அன்புநேசம், பரிவு, இரக்கம், பிரியம்
அழகுவனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம்
அரசன்மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன்
அகிம்சைதுன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
அறிவுரைபுத்திமதி, நல்லுரை, உபதேசம்
அறிவுஉணர்வு, ஞானம், மதி, விவேகம், புத்தி
அடிபாதம், தாள், கால்
இரவுஇராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
உணவுஊண், ஆகாரம், அடிசில், உண்டி
உண்மைமெய், சத்தியம், வாய்மை
உதிரம்செந்நீர், குருதி, இரத்தம்
ஒளிவெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
குழந்தைமகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை
கணவன்கொழுநன், தலைவன், பதி, நாயகன்
காற்றுவளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
கேடுநாசம், அழிவு, சேதம், சிதைவு
தரித்தல்அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
ஆதிமுதல், ஆரம்பம், தொடக்கம்
குடித்தல்அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
ஞானம்அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி
ஒலிஓசை, அரவம், தொனி, சத்தம்
உடல்சரீரம், உடம்பு, மேனி
அபாயம்ஆபத்து, இடர், இடையூறு
காடுஅடவி, கானகம், வனம், ஆரணியம்
இனம்உறவு, சுற்றம், குலம், ஒக்கல், பரிசனம்
சாலைஉபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
கல்விகலை, வித்தை, படிப்பு
ஆசிரியர்ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
நீதிதர்மம், நடு, நியாயம், நெறி

இவ்வாறான சொற்கள் தமிழ்மொழியின் வளத்தையும் சொற்பெருக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் ஆண்டுகள் பற்றித் தெரிந்துகொள்ள https://www.thamilshshudar.com/2025/07/thamilsh-shudar_25.html இந்த இணைப்பினைச் சொடுக்கவும். 

தமிழன்புடன்
கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days