📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
மொழியறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழியறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழ் ஆண்டுகள் | Thamilsh Shudar

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டு விழா பெயர்
முதல் ஆண்டுகாகித விழா
இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
மூன்றாம் ஆண்டுதோல் விழா
நான்காம் ஆண்டுமலர், பழ விழா
ஐந்தாம் ஆண்டுமர விழா
ஆறாம் ஆண்டுசர்க்கரை, கற்கண்டு விழா
ஏழாம் ஆண்டுகம்பளி, செம்பு விழா
எட்டாம் ஆண்டுவெண்கல விழா
ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
பத்தாம் ஆண்டுதகரம், அலுமினியம் விழா
பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
பன்னிரண்டாம் ஆண்டுலினன் விழா
பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
பதினான்காம் ஆண்டுதந்த விழா
பதினைந்தாம் ஆண்டுபடிக விழா

வியாழன், 24 ஜூலை, 2025

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) - 2 | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள் - 2

கழுத்துப் பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • கழுத்தறுத்தல் பெரும் துன்பத்த்திற்கு உள்ளாக்குதல். / தீமை செய்தல்
  • கழுத்திற் கட்டுதல் வலிந்து பொறுப்பாளியாக்குதல்
  • கழுத்துக் கொடுத்தல் தன் வருத்தம் பாராமல் பிறர் காரியத்தை ஏற்று நிற்றல் / வாழ்க்கைப்படுதல்
  • கழுத்து முறித்தல் வருத்துதல் / நிர்ப்பந்தித்தல்
  • கழுத்தைக் கட்டுதல் விடாது நெருக்குதல்

திங்கள், 21 ஜூலை, 2025

துண்டுவிழும் தொகை, மிகை ஊதியம், குறை நிரப்பு, மிகைச் செலவு என்பன யாவை? | THAMILSH SHUDAR

1. குறைநிரப்பு பிரேரணை (Supplementary Budget) என்பது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும் போது அல்லது புதிய செலவினங்கள் தேவைப்படும்போது, அவற்றை ஈடுசெய்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஆகும்.

2. மிகை ஊதியம் என்பது ஒரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட அதிகமாக வழங்கப்படும் தொகை அல்லது சலுகையைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் காரணமாக வழங்கப்படும். உதாரணமாக, ஒரு மேலதிக வேலை நேரம் அல்லது சிறப்பு செயல்திறனுக்காக வழங்கப்படும் ஊதியம் மிகை ஊதியமாகக் கருதப்படலாம்.

செவ்வாய், 15 ஜூலை, 2025

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள்

அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • அடிக்கீழ்ப்படுத்துதல் வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
  • அடிகோலுதல் ஆயத்தம் செய்தல்
  • அடிசாய்தல் அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
  • அடி திரும்புதல் பொழுது சாய்தல்
  • அடி தொடுதல் பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
  • அடி நகர்தல் இடம்விட்டுப் பெயர்தல்

திங்கள், 14 ஜூலை, 2025

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

இக்கட்டுரை முதலில் கலைமகன் பைரூஸ் அவர்களின் கலைமகன் ஆக்கங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேட தேவைக் குழந்தைகள் ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எழுதப்பட்டது.

மெல்ல கற்கும் மாணவர்கள் என்றால் என்ன? அவர்களின் இயல்புகள் என்ன? அவர்களை எப்படி அடையாளம் காணலாம்? அவர்களுக்கு ஏற்ற கல்வி முறைகள் எவை? என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.