📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 30 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 2

  பின்வரும் பந்தியை வாசிக்க.

            மனிதனும் ஓர் இயற்கை. இயற்கையோடு தொடர்பு கொள்ளும்போது மனிதன் ஆற்றல் பெறுகிறான். இயற்கையோடு இணைந்து வாழ்பவருக்கு இயற்கையானது அறிவாகவோ, ஆற்றலாகவோ, செல்வமாகவோ தன்னை வாரி வழங்குகின்றது. இயற்கையை நேசிப்பவர்களிடம் அன்பு மிகுதியாகும். உள்ளத்தில் அழகு பெருக்கெடுக்கும். ஆர்வம் துளிர்விடும். மகிழ்ச்சி பன்மடங்காகும். புதுமை

சனி, 28 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 1

பின்வரும் பந்தியை வாசிக்க.

           ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் கல்வியிற் தங்கியுள்ளது. அத்தகைய பெருமையை ஈட்டிக் கொடுப்பதற்குக் காரணமாக அமையும் நூல்களை நாம் கண்களைப் போன்று பேணிக் காப்பது கடமையாகும். எனவே நூல் நிலையங்களில் உள்ள நூல்களைக் கிழிக்காமலும், சிதைக்காமலும் பக்குவமாகப் பயன்படுத்துவோம். 


01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.

1. ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் எதில் தங்கியுள்ளது?

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது?

 

ஐயம் - 3

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது? அந்த அடிகளை இயற்றியவர் யார்? அந்த அடி இடம்பெறும் கவிதையின் தலைப்பு யாது?

தௌிவு

-----------

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் 'பாரதியார் கவிதைகள்' ஆகும். அந்த அடி கொண்ட செய்யுளை இயற்றியவர் பாரதியார் ஆவார். 

பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான 'பாரத சமுதாயம்' எனும் தலைப்பிலான கவிதையிலேயே இவ்வடி இடம்பெற்றுள்ளதைக்

வெள்ளி, 27 டிசம்பர், 2024

'ஆவாகனம்' என்றால் என்ன? விளக்குக.

ஐயம் -2

ஆவாகனம் என்ற சொல்லுக்கு பிழையான விளக்கமே இதுவரைக் காலமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரீட்சை வினாத்தாள்களிலும் பிழையான விடைகளே  வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் மிகச் சிறந்த விளக்கத்தினை வழங்க முடியுமாயின் வழங்கலாம்.

தௌிவு

-----------

 ‘ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம்


ஐயம்  - 1

க், ச், த், ப் எனும் 4 மெய்களும் உடநிலை மெய்மயக்கமாக மாத்திரமே வரும் என்பது நியதியல்லவா? அவ்வாறெனில் தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம் தர முடியுமா?

தௌிவு

ஆம். (ர், ழ் தவிர்ந்த ஏனைய பதினாறு மெய்களில்) க், ச், த், ப் எனும் நான்கு மெய்களும் தம்மோடு தாம் மாத்திரம் மயங்கும் என்கிறது இலக்கண

சேர்த்தெழுதுதல்.


1. அடி + சுவடு = 

2.  ஆறு + மலை =

3. ஐந்து + ஐந்து = 

4. ஐந்து + புலம் =

5. ஒன்று + ஊர் =

6. ஒன்று + ஒன்று =

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

பயிற்சி - 1


ஓரிடத்தில் இருந்திடாமல்

ஓடி ஓடிக்  கேட்டிடலாம்

பாடகரைப் பார்த்திடாமல்

பாட்டுக்களைக் கேட்டிடலாம்

ஒன்றிணைவோம்!

 

அன்பு மாணாக்கருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்.

இந்த வலைப்பூவானது தரம் 3 - 5 வரையான மாணாக்கரின் நலன்கருதி உருவாக்கப்பட்டதாகும்.

தமிழ்மொழி, சிங்களம், ஆங்கிலம் போன்ற பாடப்பகுதிகளில் இதுவரை வௌிவந்த வினாக்களை, குறிப்புக்களைத் தேடியெடுத்து கதம்பமாக இந்த வலைப்பூவில் தரவுள்ளேன். 

செவ்வாய், 1 நவம்பர், 2022

கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன் |THAMILSH SHUDAR


எனக்குள் தொலைந்துபோன

 என் நிம்மதியைத் 

தேடியலைகிறேன்.....


காலமும் கழிகிறது

மரண வலியோடு....

வாழ்வோ தொடர்கிறது....


கரைந்துபோன நாட்களுக்காய் 

கதறுகிறது ஆன்மா...

உறைந்துபோன நிலையில்

குற்றுயிராய்க் கிடக்கிறது

கல்புக்குள்ளிருக்கும் கலிமா...


உறக்கமில்லாமல் தவித்த 

இரக்கமற்ற இரவுகளில்

தவறவிட்ட என் தஹஜ்ஜுத்

விழிநீராய் வழிகிறது...


இறைவனை 

நினைக்க மறந்த 

என் தொழுகையின் ரூஹானிய்யத் 

கனவுகளிலும் கறுப்பு நிறமாய்

கண்முன்னே தெரிகிறது


ஓத மறந்த அல்குர்ஆன்

நெஞ்சுக்குள்  ஆணியாய்

ஓங்கி அறைகிறது


அதுவரை  உச்சரிக்காத 

தூய தஸ்பீஹ்கள்

என் மரணத் தறுவாயில் 

என்னை வழிகூட்டிப் போகின்றன


என் கண்களின் ஓரம் 

கசியும் நேரம்

வார்த்தைகள் சோகம் சுமந்து

மௌன மொழிகளால்...

இறைவனுக்கு நான் 

எழுதிய கடிதங்கள்...

முகவரி தொலைத்து

விடை தெரியா வினாவோடு....

இன்னும் அவன் பாதத்தின் கீழே 

பணிந்து ஸுஜூது செய்து அழுகிறது...


நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆசிரியரும் களுத்துறை வலய தமிழ் மொழிப்பாட வளவாளரும் 'தமிழ்மொழி ஆசிரியர்கள்' குழுமத்தின் நிறுவனருமான திருமிகு. பேருவளை றபீக் மொஹிடீன் அவர்களது கவிதை இது.