📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 16 ஜூலை, 2025

ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும் | THAMILSH SHUDAR

📖 ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும்

– தமிழ்ச்சுடருக்காக ✍️ கலைமகன் பைரூஸ்

கவிதை என்பது சுருங்கி ஒளிரும் உணர்வு. அந்த சுருக்கத்திலே – ஒரு பருவம், ஒரு துளி, ஒரு வாசனை, ஒரு மனநிலை – பிரமாதமாக வெளிப்படலாம். இத்தகையக் கவிதை வடிவம்தான் ஹைக்கூ.

🌸 ஜப்பானிய ஹைக்கூ – ஒரு தருணத்தின் கவிதை

Haiku (俳句) என்பது ஜப்பானிய குறுங்கவிதை வடிவமாகும். இது குறுகியதாயினும், அதில் உள்ள உணர்ச்சி மிகுந்த ஆழம் யாரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

செவ்வாய், 15 ஜூலை, 2025

'தெற்கில் உதித்த சூரியன்' M H M எம்.எச்.எம். ஷம்ஸ் | THAMILSH SHUDAR

 இலங்கை கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 10 - 11 மாணாக்கருக்காக வௌியிடப்பட்டுள்ள, தமிழ் இலக்கிய நயம் பாடப்புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில் பன்முக எழுத்தாளர் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய படம்  கொடுக்கப்பட்டு, அவர் பற்றியும் குறிப்புகள் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளது. 
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

- தமிழ்ச்சுடர்.கொம்

'தெற்கில் உதித்த சூரியன்'

மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.
20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள்

அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • அடிக்கீழ்ப்படுத்துதல் வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
  • அடிகோலுதல் ஆயத்தம் செய்தல்
  • அடிசாய்தல் அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
  • அடி திரும்புதல் பொழுது சாய்தல்
  • அடி தொடுதல் பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
  • அடி நகர்தல் இடம்விட்டுப் பெயர்தல்

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் | THAMILSH SHUDAR

திங்கள், 14 ஜூலை, 2025

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

இக்கட்டுரை முதலில் கலைமகன் பைரூஸ் அவர்களின் கலைமகன் ஆக்கங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேட தேவைக் குழந்தைகள் ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எழுதப்பட்டது.

மெல்ல கற்கும் மாணவர்கள் என்றால் என்ன? அவர்களின் இயல்புகள் என்ன? அவர்களை எப்படி அடையாளம் காணலாம்? அவர்களுக்கு ஏற்ற கல்வி முறைகள் எவை? என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

தரம் 06 - தமிழ் - இரண்டாம் தவணைப் பரீட்சை - Thamilsh Shudar

Thamilsh Shudar இனால் இன்றிலிருந்து கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 6 வகுப்பிற்கான தமிழ்மொழி | மேல் மாகாணம் | 2018 வௌியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜூலை, 2025

தரம் 5 முன்னோடிப் பரீட்சை வினாப்பத்திரம் - வினாத்தாள் 2

1. பின்வரும் பந்தியை வாசித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

      குமார் மாலைநேர வகுப்புக்கு தனது தாயாருடன் சென்றான். அப்போது பாதையோரத்தில் சிறிய பூனைக் குட்டியொன்று கத்தியபடி இருந்தது. பாசத்துடன் அப்பூனைக்குட்டியைத் தூக்கி எடுத்தான். அவன் ‘அம்மா இந்தப் பூனைக்குட்டி பாவம் வீட்டுக்குக் கொண்டு போவோமா?’ என்று கேட்டான். அம்மாவும் சரியெனக் கூறியதால் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
       I.          பந்தியில் வந்துள்ள காலப் பெயர் ஒன்றை எழுதுக.
     II.          பந்தியில் வந்துள்ள பெயரடைமொழிச் சொல்லொன்றை எழுதுக.

வியாழன், 10 ஜூலை, 2025

G.C.E. O/L RESULT 2024 (2025) வௌியாயிற்று.

 க.பொ.த. (சா.த) 2024 (2025) மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது.

பரீடசைக்குத் தோற்றிய மாணாக்கர் அனைவருக்கும் 'தமிழ்ச்சுடர்' வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்ப்பதற்கு https://www.doenets.lk/examresults எனும் இணையத்தள முகவரிக்குச் செல்லலாம். 

📚 தமிழ் மொழி பற்றிய வினா - விடைகள்

📘 தமிழ் அறிவியல் & இலக்கிய வினா-விடை தொகுப்பு

🌟 தமிழ் மொழி சம்பந்தப்பட்ட வினாக்கள்

  • வினா: தமிழ் மொழிக்கு யாரால் "செம்மொழி" பதவி வழங்கப்பட்டது?
    விடை: இந்திய அரசு, 2004-ல்
  • வினா: தமிழ் மொழி யுனிகோடு (Unicode) குறியீட்டு துவக்கம் எப்போது?
    விடை: 1991
  • வினா: தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல் எது?
    விடை: தொல்காப்பியம்
  • வினா: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வாறு 247 ஆகிறது?
    விடை: 12 உயிர் + 18 மெய் + 216 (உயிர் × மெய்) + ஆய்த எழுத்து = 247
  • வினா: தமிழில் எழுதிய முதல் பெண்பாற் புலவர் யார்?
    விடை: ஔவையார்

திங்கள், 7 ஜூலை, 2025

2026 ஆம் ஆண்டில் கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை யாவை?

 கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக கல்வியமைச்சர் வௌியிட்டுள்ள கருத்துக்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. ஐந்து தூண்களில் மாற்றம்

  • கலைத்திட்ட மறுசீரமைப்பு
  • ஆசிரியர் வலுவூட்டல்
  • புதிய மதிப்பீட்டு முறை
  • அடிப்படை வசதிகள விருத்தி
  • பொதுமக்கள் தௌிவூட்டல்
  • 2026 இல் அமுலாகும்