📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 25 ஜனவரி, 2025

ஒருதந்தையின்உண்மையான முகம் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா?

1- உங்கள் தந்தை உங்களைத் திட்டினாலும், அவர் உங்களை வெறுக்கமாட்டார்.

 2- அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால், ​​அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்.

 3- நீங்கள் அவரை மெளனமாக  பார்த்தால், ​​அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கண வினாக்கள் | இலக்கண - பல்தேர்வு வினா விளக்கங்கள்

 தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும். 

உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.  

1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்

இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?

ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவுடையனவாகவும் அமைந்து இரு சொற்கள் இணைந்து வருவன அது இணைமொழி எனப்படும். பல சொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை ஓரிரு சொற்களில் இலகுவாக விளக்க உதவும்.

இணைமொழிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
        உதாரணம்     = சீரும் சிறப்பும்
                                    = ஏழை எளியவர்

செவ்வாய், 21 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

 பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.          

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி 4

9.மலைபடுகடாம்:

வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3

ஆற்றுப்படை நூல்கள்:

புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:

6.சிறுபாணாற்றுப் படை:

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2

3.பட்டினப்பாலை:
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1

 பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.
பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 3

5.பரிபாடல்:

எட்டுத்தொகையில் பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாகும். இந்நூல் பரிந்து செல்லும் ஓசையை உடையதாக அமைந்தது. பொதுவாகப் பரிபாடல் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் சால்புகளைக் கொண்டு அமைந்து வரும். பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் 22 பாக்களே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களில் முருகனுக்கும் வைகைக்கும் எட்டுப்பாக்கள் வீதமும் திருமாலுக்கு ஆறு பார்க்களும் என 22 பாக்கள் உள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2

3. ஐங்குறுநூறு:

எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையில் குறைவான நூல். மூன்று முதல் ஐந்து அடிகளை எல்லையாகக் கொண்டது. திணைக்கு நூறு பாடல் விதம் 500 பாடல்களைக் கொண்டிலங்குகிறது. குறிஞ்சியைக் கபிலரும், முல்லைத்திணையைப் பேயனாரும், மருதத்திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.